நீர்கொழும்பில் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
நீர்கொழும்பு – தெல்வத்த சந்திப் பகுதியில், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்;த இரகசிய தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 668 கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட 18 பைகள் மற்றும் கொப்ரக வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
