நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலா பயணி காப்பாற்றப்பட்டார்!

தங்காலை மெடிலா கடலில் நேற்று புதன்கிழமை மாலை நீராடிக்கொண்டிருக்கையில் நீரில் மூழ்கிய பிரெஞ்சு சுற்றுலாப் பயணி மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சுற்றுலாப் பயணி கடலில் குளிக்கும்போது நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

அவ்வேளை கடற்கரையில் பணியில் இருந்த பொலிஸ் உயிர்காக்கும் அதிகாரிகளால் அவர் மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணி 22 வயதுடைய பிரெஞ்சு நாட்டவர் என தெரிய வருகின்றது.