
நீரில் மூழ்கி பெண்ணொருவர் பலி
ஹங்வெல்ல வக் ஓயாவில் நீராடச் சென்ற இரண்டு பெண்கள் நீரில் மூழ்கியதில், ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடஹவத்தை பகுதியை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றைய பெண் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்