நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி

மாத்தறை கம்புருபிட்டிய, சபுகொட பிரதேசத்தில் நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை புனித தோமஸ் கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் தருஷ தினுவர என்பரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவர் கம்புருபிட்டிய உல்லல்ல பிரதேசத்தில் வசித்து வந்தவர் என்பதுடன், பாடசாலையில் ஹாக்கி பயிற்சியில் ஈடுபட்டதன் பின்னர் நண்பர்களுடன் நீராடச்சென்ற நிலையிலேயே நீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில், பிரதேசவாசிகளின் தேடுதலில் மூன்று மணித்தியாலங்களின் பின்னரே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.