நீரில் மூழ்கி சிறுமி பலி , சிறுவனை காணவில்லை

பெலிஹல்ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன 12 வயது சிறுவனை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

அம்பகஸ்பிட்டியவில் இருந்து நேற்று மாலை காணாமல் போன சிறுவனுடனு நீராடச் சென்ற 13 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 13 வயது சிறுமியை மீட்கும் முயற்சியை தொடர்ந்து 12 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார்.

 

இதேவேளை, ஹங்வெல்ல வக் ஓயாவில் நீராடச் சென்ற 42 வயதுடைய பெண்ணொருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுடன் நீராடச் சென்ற மற்றுமொரு பெண் தற்போது அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.