நீரில் மூழ்கி ஒருவர் பலி!

-பதுளை நிருபர்-

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நிதங்கல சந்தியில் இருந்து அக்கர 80 செல்லும் வீதியில் மஹாவலி கங்கையில் இறங்கி நபர் ஒருவர் மீன் பிடிப்பதற்கு வலை வீசிய போது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் அவ்விடத்தில் இருந்தவர்களினால் 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த மஹியங்கனை பொலிஸாரும் ஊர் மக்களும் இணைந்து கங்கையில் தேடுதலை மேற்கொண்ட போது குறித்த  நபர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் தெய்யத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சல்பிடிகம தனேவெல பகுதியை சேர்ந்த 48 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்