மட்டு ,யாழ் பொது சுகாதார பரிசோதகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு பொது சுகாதார பரிசோதகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, யகிரல எதவதுனு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யகிரல எதவதுனு வலயில் குளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் போது மேலும் நான்கு நண்பர்கள் எவ்வித உயிர் ஆபத்துக்களும் இன்றி கரை சேர்ந்துள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் பகுதியைச் சேர்ந்த சத்திராசா ஹரிஷனன் (வயது-28) எனத் தெரியவருகின்றது.

உயிரிழந்தவர்கள் மொரட்டுவ மற்றும் எகொட உயன பொது சுகாதார பரிசோதகர் அலுவலகங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகின்றது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்