நீரில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளனர்

அத்தனகலு ஓயாவின் கிளையான எல் ஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

வெயாங்கொடை, மெதவத்தை பிரதேசத்தை சேர்ந்த இவர்கள்  நீராடச் சென்ற போதே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

லபுதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதிக்கும் வெயாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

மேலும் பொலிஸ் அதிகாரிகள், பிரதேசவாசிகள், இராணுவம் மற்றும் கடற்படையினரின் ஆதரவுடன் காணாமல் போனவர்கள் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்