
நீரில் மூழ்கிய 3 சிறுவர்கள்: காப்பாற்றிய பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர்கள்
கல்கிஸ்ஸை கடலில் நீராடிக்கொண்டிருக்கையில் அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை கல்கிஸ்ஸை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் காப்பாற்றியுள்ளனர்.
கொழும்பு 9 இல் வசிக்கும் 16 வயதுடைய 3 சிறுவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
3 சிறுவர்களும் கடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நீராடிக்கொண்டிருந்த போதே நீரில் இவர்கள் மூழ்கியுள்ளனர்.
உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்கள் உடனடியாக விரைந்து 3 சிறுவர்களையும் மீட்டு, அடிப்படை முதலுதவி அளித்த பின், களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
