
நீரில் மூழ்கிய எரிபொருள் நிலையங்கள் மறுசீரமைப்பு
வெள்ளத்தில் மூழ்கிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளர்.
36 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெள்ளத்தில் முற்றாக மூழ்கின. இதில் 14 எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் தவிர்த்து ஏனைய நிலையங்களை வழமைக்கு நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். வெள்ளத்தில் மூழ்கிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை எதிர்வரும் 3 தினங்களில் புதுப்பித்து அவற்றை பயன்படுத்தும் நிலைக்கு கொண்டு வர முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அணுக முடியாத நிலையில் 5 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுகின்றன. இதற்கமைய தெல்தொட்ட, கலஹா, புஸல்லாவ, உடபுஸல்லாவ, கண்டி உள்ளிட்ட பிரதேசங்களில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைந்துள்ளன.
அவற்றை வழமைக்கு கொண்டு வருவதற்கு குறிப்பிட்ட காலம் தேவையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
