நீரில் மூழ்கிய இருவரை காணவில்லை

கடந்த 24 மணித்தியாலங்களில் நீரில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளனர்.

கல்பிட்டி, இலுப்பன தீவில் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

ஜனசவிபுர, கல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன நபரை கண்டுபிடிப்பதற்காக கல்பிட்டி பொலிஸார் மற்றும் கல்பிட்டி கடற்படை முகாம் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவாலயத்திற்கு அருகில் கடலில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

காணாமற்போனவர் கந்தவத்த, வெலிபன்னகஹமுல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் மேலும் பலருடன் கடலில் நீந்திக் கொண்டிருந்த போது அலைகளில் சிக்கியதாகவும், அவர்களில் ஒருவரை பிரதேசவாசிகள் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்