
நீரில் அடித்துச் செல்லப்பட்டு இளைஞன் பலி
கம்பஹா, கெடவல அணைக்கட்டில் நேற்று சனிக்கிழமை நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உடுகம்பல பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் சிலருடன் சேர்ந்து கெடவல பிரதேசத்தில் உள்ள அணைக்கட்டில் நீராடச் சென்ற போது, அந்த இளைஞன் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
