
நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழப்பு
பொலன்னறுவை – சிரிபுர பிரதேசத்தில் நுவரகல ஏரிக்கு நீர் வழங்கப்படும் கால்வாய் நீரில் அடித்து செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நுவரகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக சிரிபுர பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிரிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
