
நீராட சென்ற 11 வயது சிறுமி மரணம்
யாழ்ப்பாணம் – சாட்டி கடலுக்குள் நீராடச் சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
