நீராடச் சென்ற இளைஞர் உயிரிழப்பு

நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தபுடுவ பகுதியில் அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஹப்புத்தளை பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இதன்போது உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் நிட்டம்புவ பொலிஸ் பிரிவில் தற்காலிகமாக வசிப்பவர் எனவும், நண்பர்கள் சிலருடன் நீராடச் சென்ற போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் வதுபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.