நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, இலங்கைக்கான சுவிட்சர்லாந்து துணைத் தூதுவரை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான சட்ட மற்றும் நீதித்துறை ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது நீதித்துறை சீர்திருத்தங்கள், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் சட்டம், மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் இடம்பெயர்வு ஒத்துழைப்பு ஆகிய துறைகள் முக்கிய இடம் வகிப்பதாக சுவிட்சர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.










