
நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது – மஹிந்த ராஜபக்ஷ
நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இலங்கை உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பை ஏற்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்த ராஜபக்ச இந்த வழக்குக்கு பதிலளிக்க நீதிமன்றம் அவகாசம் அளிக்கும்போது இந்த விவகாரம் குறித்து பதிலளிப்போம் என்றார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பானவர்கள் என இலங்கையின் உச்ச நீதிமன்றம் அண்மையில் தெரிவித்ததை அடுத்து அவi; இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) அமைப்பினர் சந்திர ஜெயரத்ன, ஜெஹான் கனகரெட்னா மற்றும் ஜூலியன் பொலிங் ஆகியோருடன் இணைந்து பொது நலன் கருதி தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
