நீதிமன்றில் முன்னிலையானார் தேசபந்து தென்னகோன்
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
பிரதான நீதவான் அருணா இந்திரஜித் புத்ததாச அண்மையில் பிறப்பித்த உத்தரவிற்கமைய தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட இருவர் மன்றில் முன்னிலையாகியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன்இ கடந்த 10 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில்இ இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்திருந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்