நீதிமன்றத்தை அவமதித்த இராஜாங்க அமைச்சர் டயனா கமகே!
நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரிடம் கோரிக்கையை முன்வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை இன்று வியாழக்கிழமை பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பொன்று தொடர்பில் சமூக ஊடகங்களில் அறிக்கை வெளியிட்டதன் மூலம் டயனா கமகே நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக கொழும்பு பிரதான நீதிவான் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தனக்கெதிரான வழக்கில் தீர்ப்பை அறிவிப்பதற்கு முன்னர் முறைப்பாட்டாளர் தீர்ப்பை விலைக்கு வாங்கியதாக டயானா கமகே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை நீதிமன்றில் தெரியவந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்