
நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அழிக்கப்படவுள்ள 100 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் கைப்பற்றப்பட்ட 100 கிலோவுக்கும் அதிகமான சட்டவிரோத போதைப்பொருள் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று வியாழக்கிழமை அழிக்கப்படவுள்ளது.
ஒன்பது சந்தேக நபர்களிடம் இருந்து போதைப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள்தண்டனை விதித்தது.
மேலும் இன்று புத்தளம் சீமெந்து நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அழிக்கப்படலுள்ள போதை பொருட்களை பாதுகாப்பாக இடமாற்றுதல் மற்றும் அந்த இடத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
