
நீதிமன்றத்தினுள் மோதிய சட்டத்தரணிகள்
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டு சட்டத்தரணிகளுக்கு இடையே இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல் தொடர்பில் கெசல்வத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் போது ஒரு மாதத்திற்கு முன்பு வழக்குகளை பகிர்வது தொடர்பான வாக்குவாதத்தின் பின்னரே இந்த மோதல் இடம்பெற்றதாகவும் மோதலின் பின்னர் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கெசல்வத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
