நீதிக்காக ஜனாதிபதியைக் கூட சந்திக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ள பாதுகாப்பு தரப்பு
மட்டக்களப்பில் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை மயிலத்தமடு மாதவணை பிரதேச பால் பண்ணையாளர்கள் நீதி கோரி முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் திங்கட்கிழமை அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உறுப்பினர்கள் வருகை தந்த போது அவர்கள் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் தடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த நாட்டிலே தொடர்ச்சியாக நடந்து வருகின்ற இவ்வாறான அத்துமீறல்கள் அராஜகங்கள் காரணமாகத்தான் நாம் வீதியிலிறங்கி நீதிக்காகப் போராடுவதோடு எங்களுக்கு நீதி வேண்டும் என்பதற்காக நாட்டினுடைய ஜனாதிபதியைக் கூட சந்திக்க முடியாத ஒரு சூழ்நிலையை இந்த நாட்டினுடைய அரசியல் ஏற்படுத்தியிருக்கிறது நீதிக்காக ஜனாதிபதியைக் கூட சந்திக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ள பாதுகாப்பு தரப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் அவ்வாறு நீதி கோருகின்ற பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவதோடு அவ்வாறான ஒழுங்கமைப்புகளை செய்கின்ற சமூக செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதோடு அவர்கள் மீதான விசாரணைகளும் தொடர்வது ஒரு பாரிய சர்ச்சையையும் கேள்வியையும் மன வேதனையையும் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருவதையும் நினைவூட்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்