நீண்ட நாட்களின் பின்னர் யாழ் மக்கள் மகிழ்ச்சியில்

யாழ்ப்பாண மக்கள் நீண்ட மாதங்கள் இடைவெளியின் பின்னர் பெய்த மழையினால் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக நிலவிய அசாதாரண வெப்பநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விலங்குகள் உட்பட மனிதர்களும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த வெப்பத்தால் நீர் நிலைகள் வரண்டு போயிருந்தது. பயிர்கள் நீரில்லாமல் கருகிப் போயிருந்தன. குடிநீருக்கு கூட தட்டுப்பாடு நிலவி வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டின் சில பகுதிகளிலும் மழை பெய்து வந்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக வெப்பமே நிலவி வந்தது. எனினும் நேற்று ஞாயிற்று கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் நீண்ட மாதங்கள் இடைவெளியின் பின்னர் திருப்திகரமான மழை வீழ்ச்சி பதிவாகியது. இதனால் யாழ்ப்பாண பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்