நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த முச்சக்கரவண்டி திருடன் கைது!

நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த முச்சக்கரவண்டி திருடன் கைது-முச்சக்கரவண்டி திருட்டுக்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வெள்ளம்பிட்டி சங்கீத செவண மாடி வீட்டுத் தொகுதி அருகே சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் 25 வயதுடைய கொலன்னாவை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், வெள்ளம்பிட்டி மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளில் இவரால் திருடப்பட்ட இரண்டு முச்சக்கரவண்டிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.