நீண்ட காலமாக மரங்களை வெட்டி விற்பனை செய்து வந்த 12 பேர் கைது

-யாழ் நிருபர்-

வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இருந்து நீண்ட காலமாக சட்டவிரோதமாக சவுக்கம் மரத்தை வெட்டி விறகிற்காக விற்பனை செய்த 12 பேர் இன்று திங்கட்கிழமை காலை பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

நீண்டகாலமாக மணல்காடு சவுக்கம் மரங்கள் விறகிற்காக அழிக்கப்பட்டுள்ளது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்கவின் கவனத்தில் கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று காலை அவரது தலைமையில் குறித்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றன.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்களை நாளை செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.