நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது

நீண்ட காலமாக மோட்டார் சைக்கிள்களை கொள்ளையடித்ததாகத் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள் அம்பலாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வெல்லவாயவை சேர்ந்த 26 மற்றும் 42 வயதுடையவர்கள், என பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாந்தோட்டை, ஹங்காம மற்றும் திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவுகளில் இருந்து திருடப்பட்ட 10 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.