நீண்ட காலமாக சட்ட விரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

-நுவரெலியா நிருபர்-

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் சாமிமலை ஸ்டொக்ஹோம் தோட்ட பகுதியில் உள்ள மவுஸ்சாகலை நீர் தேக்கத்திற்கு நீரை வழங்கும் சாமிமலை ஓயா வில் முறையில் சட்ட விரோதமாக நீண்ட காலமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை இன்று சனிக்கிழமை காலை ஹட்டன் பொலிசார் மூன்று கைது செய்தனர்.

அவர்கள் அகழ்வுக்கு பாவித்த உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மூன்று பேரையும் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக ஹட்டன் வலய குற்றத்தடுப்பு உயர் அதிகாரி பிரேமலால் தெரிவித்தார்.