
நீச்சல் தடாகத்தில் விழுந்து சுற்றுலா பயணி உயிரிழப்பு
வட்டுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில், தென் கொரிய சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஹோட்டலின் நீச்சல் குளத்தில் 43 வயதுடைய நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
நீச்சல் குளத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது கைத்தொலைபேசியில் அவர் குளத்தில் குதிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுற்றுலா பயணி குளத்தின் அடிப்பகுதியில் தலை மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
