நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 6 வயது சிறுமி உயிரிழப்பு

சுற்றுலா விடுதி ஒன்றின் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

பதுரலிய  இலுக்பொத விடுதியொன்றில் தனது பெற்றோருடன் தங்கியிருந்த குறித்த சிறுமி நீச்சல் குளத்தில்  தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமி களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுமி வெலிவேரிய அம்பரல்வ வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன்,  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுரலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.