“நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்” – ட்ரம்பின் சர்ச்சை பேச்சு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடன் எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி (Abdel Fattah El-Sisi), துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdoğan) மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி (Tamim bin Hamad Al Thani) ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனியிடம் மனம் திறந்து பேசிய ட்ரம்ப், “நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண் என்று தெரிவித்தார்.
மேலும், இதையே நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும் எனவும் ட்ரம்ப் கிண்டலாகத் தெரிவித்தார். ட்ரம்பின் இந்தப் பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.