நிளாமியா அரபுக் கல்லூரியில் புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு

-மூதூர் நிருபர் –

திருகோணமலை – கிண்ணியா நிளாமியா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை வரவேற்பு நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை கல்லூரி வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வை நிளாமிய்யா அரபிக் கல்லூரி குழுவினரே ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது புதிய மாணவர்கள் மற்றும் மாணவியருக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேடைக் கலை நிகழ்ச்சிகள், மற்றும் பரிசளிப்புகள் போன்றவை இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பிரதான விருந்தினராக வெடிபொருட்கள் கட்டுப்பாட்டு உதவி ஆணையராக பணியாற்றும் அஷ்ஷெய்க் எம்.எஸ். முகம்மது இக்ரிமா (BSc, MSc, LLB) கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினராக Global Ehsan Relief – Sri Lanka நிறுவனத்தின் இயக்குநர் திரு. டி. முகம்மது ஜாரூக் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி முஹம்மது யூசுப் முஹம்மது லாபீர் கலந்து கொண்டார்.

அத்துடன் இந்நிகழ்வில் கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் என பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நிளாமியா அரபுக் கல்லூரியில் புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு

நிளாமியா அரபுக் கல்லூரியில் புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு