நில அதிர்வு

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வு மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

இருப்பினும், உயிர்சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நில அதிர்வினால் இலங்கை மற்றும் இந்தியக் கடற்கரைகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.