நிலுவையில் கிடக்கும் சாரதி அனுமதிப் பத்திரங்கள்

300,000க்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்போது வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி எதிர்வரும் 3 மாதங்களுக்குள் இந்த சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட்டு விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இந்த ஆண்டுக்குள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடும் செயல்முறைக்குத் தேவையான ஒரு மில்லியன் அட்டைகளை வாங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.