நிலவும் சீரற்ற காலநிலை: வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

பாதைகள் தற்போது வழுக்கும் நிலையில் காணப்படுவதால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்