நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோதிய முச்சக்கரவண்டி: மூவர் படுகாயம்

முச்சக்கரவண்டியொன்று நிறுத்தியிருந்த பேருந்து மீது மோதி மூவர் படுகாயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தலம பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு தொழில் நிமித்தம் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த மதுரங்குளிய கரிகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த குழுவினரின் முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து முந்தலம் வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி பயணிகளை ஏற்றும்போது முச்சக்கரவண்டி பின்பக்கம் வேகமாக வந்ததால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்