நியூஸிலாந்து அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி

நியூஸிலாந்து அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில்  நியூஸிலாந்து அணி  9 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி  முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  19 ஓவர்களில்  141 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில்  தனஞ்சய டி சில்வா அதிகபட்சமாக 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க  குசல் ஜனித் பெரேரா 35 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில்  நியூஸிலாந்து அணி சார்பில்  அடம் மில்னே 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

142 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய நியூஸிலாந்து அணி  14.4 ஓவர்களில்  ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியடைந்தது.

துடுப்பாட்டத்தில்  டிம் செபெர்ட் அதிகபட்சமாக 79 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

ஆட்டநாயகனாக அடம் மில்னே தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம்  3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர்  1 – 1 என்ற அடிப்படையில் சமநிலை பெற்றுள்ளது.

இந்த தொடரின் இறுதிப் போட்டி  எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்