நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக சொஹ்ரான் மம்தானி (வயது 34) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் என்ற வரலாற்றுச் சாதனையை படைக்கவுள்ளதுடன், 1892 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தெரிவாகும் மிக இளைய மேயர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

உகண்டாவில் கம்பாலவில் பிறந்த சொஹ்ரான் மம்தானி, நியூயோர்க் நகர மேயராக தெரிவாகும் முதல் ஆபிரிக்கர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய – அமெரிக்கரான சொஹ்ரான் மம்தானி, குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ குவோமோ ஆகியோர் போட்டியிட்டனர்.

அக்டோபர் 25 ஆம் திகதி தொடங்கிய வாக்குப்பதிவின் முடிவில் ஸோரான் மம்தானி வெற்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, 1969 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகளவிலான வாக்குகளாக 20 லட்சம் வாக்குகள் பதியப்பட்டதாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது.

34 வயதே ஆன சொஹ்ரான் மம்தானி, இந்திய திரைப்பட இயக்குநர் மீரா நாயரின் மகனாவார்.

சொஹ்ரான் மம்தானியின் தந்தை முகமது மம்தானி, 1946 இல் அப்போதைய பம்பாய் நகரில் பிறந்தவர்.

மம்தானி வென்றால் நியூயோர்க் பேரழிவை சந்திக்கும் என ஐனாதிபதி ட்ரம்ப் விமர்சித்திருந்தார். நியூயோர்க் மேயர் தேர்தல் முடிவு ட்ரம்ப் ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை காட்டுவதாக உள்ளது