நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு முன்பாக பொது மக்கள் போராட்டம்

நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு முன்பாக பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் அண்மையில் முன்வைக்கப்பட்ட சட்டமூலமொன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகச் தெரிவிக்கப்படுகிறது.

மவோரி எனப்படும் நியூசிலாந்தின் பூர்வீக பழங்குடி மக்களுக்கும் பிரித்தானிய அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட 184 ஆண்டுகள் பழமையான ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலமொன்று நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அண்மையில் கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுமார் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நியூசிலாந்து  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சட்டமூலமானது மவோரி மக்களின் உரிமைகளை வலுவிழக்கச் செய்வதாகவும், இனங்களுக்கிடையிலான உறவுகளைப் பல தசாப்தங்கள் பின்னோக்கிக் கொண்டு செல்வதற்கு வழிவகுக்கும் எனவும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்