
நியூசிலாந்து- அவுஸ்திரேலியா :2-வது டி20 போட்டி கைவிடப்பட்டது
நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில், போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டது.
இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் இறுதி டி20 போட்டி நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
