
நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து 129 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 10 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இதற்கமைய 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை 4-1 என்ற அடிப்படையில் நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
