நியூசிலாந்து அணி 143 ஓட்டங்களால் முன்னிலை

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.

தமது இரண்டாவது இன்னிங்சிற்காக இன்று சனிக்கிழமை ஆட்ட நேர முடிவில் துடுப்பெடுத்தாடிவரும் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதனையடுத்து தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்