
நியுமோனியா காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்
யாழ் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இளைஞன் நியுமோனியா காய்ச்சல் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
துன்னாலை வடக்கு, கரவெட்டியைச் சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் (வயது – 29) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதுடன் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில் நியுமோனியா காய்ச்சலாலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
