நிமோனியா காய்ச்சல் அறிகுறிகள்

நிமோனியா காய்ச்சல் அறிகுறிகள்

நிமோனியா காய்ச்சல் அறிகுறிகள்

🔴நிமோனியா என்பது பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் நுரையீரலில் ஏற்படும் நோய்த்தொற்றாகும். இதில் பாக்டீரியல் நிமோனியாவானது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே என்னும் ஒரு வகையான பாக்டீரியாவால் ஏற்படுகிறது. அதே சமயம் வைரஸால் ஏற்படுவது தான் இன்ஃப்ளூயன்ஸா. உலகளாவிய நிமோனியா வழக்குகளில் 23 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. அதில் இறப்பு விகிதம் 14 முதல் 30 சதவீதம் வரை ஆகும்.\

🔴நிமோனியா என்பது நுரையீரலில் உள்ள சிறு காற்றுப் பைகளான ஆல்வியோலியில் திரவங்கள் தேங்கியிருக்கும் அல்லது வீங்கி இருக்கும் நிலையாகும். நிமோனியாவானது ஒன்று அல்லது இரண்டு நுரையீரல்களையும் பாதிக்கலாம். வைரஸ் அல்லது பாக்டீரியாக்கள் தான் பொதுவாக நிமோனியாவைத் தூண்டும். ஆனால் அரிதாக சில நுண்ணுயிரிகள், மருந்துகள் அல்லது ஆட்டோ இம்யூன் நோய்களும் இதனை ஏற்படுத்தலாம். எனவே தான் மற்ற ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

🔴நிமோனியாவிற்கு உடனே சிகிச்சைகளை மேற்கொள்ளாவிட்டால், உயிரை இழக்கும் அபாயமும் உள்ளது. எனவே நிமோனியாவின் அறிகுறிகளை ஒவ்வொருவரும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சைகளை மேற்கொண்டு குணமாகலாம். இப்போது நிமோனியாவில் சில முக்கியமான அறிகுறிகளை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

📌குளிர்ச்சி அல்லது உடல் நடுக்கம் நிமோனியாவின் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் நிமோனியா இருந்தால், குளிர்ச்சியானது மிகவும் வேகமாக வரும் மற்றும் அவை மிகவும் தீவிரமாக இருக்கும். மேலும் இந்த வகையான உடல் நடுக்கத்துடல் காய்ச்சலும் இருந்தால், பாக்டீரியல் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.

📌நிமோனியாவில் பல வகைகள் உள்ளன. அந்த நிமோனியாவின் வகை மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து, அது வறட்டு இருமல் அல்லது நெஞ்சு சளியை உருவாகும். அதில் பாக்டீரியல் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு அடிக்கடி இருமலுடன் நிறைய சளி வெளியேறும். இதற்கு நேர்மாறாக, வைரல் நிமோனியா குறைவான சளியை உருவாக்கி வெளியேற்றும்.

📌ஒருவரது நுரையீரல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால், அதுவும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருந்தால், இருமல் மற்றும் மூச்சுத் திணறலால் இதய தசைகள் சோர்வடைந்து, நெஞ்சு வலி அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் மிகவும் கடுமையான நெஞ்சு வலி இருந்தால், அது நிமோனியா தீவிரத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

📌நிமோனியா செப்சிஸாக மாறும் போது, அது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை அழிக்கத் தொடங்கும். இதன் விளைவாக இரத்த அழுத்தம் மிகவும் குறையும், சிறுநீர் வெளியேற்றம் குறையும் மற்றும் மனநிலை கூட பாதிக்கப்படலாம். இதன் காரணமாக ஒருவருக்கு மன குழப்பம் அல்லது தலைச்சுற்றல் போன்றவை ஏற்படலாம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

📌ஒருவருக்கு நிமோனியா இருந்தால், அந்நபர் சுவாசிக்க சிரமப்படுவார். ஏனெனில் தொற்றானது நுரையீரல் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, போதுமான ஆக்ஸிஜனை பெற முடியாமல் செய்யும். இதனால் தான் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிபுலைசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதுவும் ஒரு குழந்தை நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்து சுவாசிப்பதில் சிரமத்தை சந்தித்தால், அவர்களின் உதடுகள் மற்றும் விரல் நகங்கள் நீல நிறத்தில் மாறும். இந்நிலையில் உடனே மருத்துவரிடம் அக்குழந்தையை கொண்டு செல்ல வேண்டும்.

📌அடிக்கடி காய்சசல் வந்து வந்து போகிறதா? அப்படியானால் பாக்டீரியல் அல்லது வைரல் நிமோனியா இருப்பதற்கான வாய்ப்புள்ளது. அதேப் போல் உடலின் வெப்பநிலை மிகவும் குறைவாக இருந்தால், அது பாக்டீரியல் நிமோனியா தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

நிமோனியா காய்ச்சல் அறிகுறிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்