நினைவேந்தலுக்கு தடையில்லை : மூதூர் நீதிமன்றம் உத்தரவு

-திருகோணமலை நிருபர்-

பொது சுகாதாரம் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் மாவீரர் தினத்தை கொண்டாடலாம் என மூதூர் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது

மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை  திருகோணமலை சட்டத்தரணி தேவராஜா தவராஜசேகரம் ரமணனால்  நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த நகர்த்தல் பத்திரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மூதூர் நீதவான் கடந்த 23ஆம் திகதி வழங்கப்பட்ட தடை உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் புலி சின்னங்களை பயன்படுத்தாமல் சரியான முறையில் பொது சுகாதாரத்துக்கு பாதிப்புகள் ஏற்படாமலும் பொது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமலும் தமது நினைவேந்தலை நடாத்த முடியும் எனவும் நீதவான் திறந்த நீதிமன்றத்தில் கட்டளையிட்டார்.

இவ்வழக்கின் போது மூதூர் நீதிமன்றத்தில் கடமையாற்றும் அனைத்து இஸ்லாமிய சட்டத்தரணிகளும் ஆதரவு வழங்கியதுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்,ஏ, சுமந்திரன் நீதிமன்றத்தில் சமர்ப்பணத்தை செய்திருந்தார்.

அத்துடன் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் எஸ்.குகதாஸன் மற்றும் பொருளாளர் வெள்ளத்தம்பி சுரேஷ் பிரசன்னமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்