நினைவுச்சின்ன கலசம் மற்றும் சமன் தேவர் சிலை வைப்பு

-மஸ்கெலியா நிருபர்-

2025/2026 சிவனொளிபாத மலை யாத்திரை காலத்தைத் தொடங்கும் முதல் நினைவுச்சின்ன கலசம் மற்றும் சமன் தேவர் சிலை செவ்வாய்க்கிழமை பக்தர்களின் வழிபாட்டிற்காக பெல்மதுளை கல்பொத்தாவெல, ஸ்ரீ பாத ராஜமஹா விஹாரையில் வைக்கப்பட்டன.

இந்த ஆண்டு சிவனொளிபாத மலை
யாத்திரை காலம் அதாவது உண்டுவப்புர பசலோஸ்வக போயா தினத்தில் தொடங்கும்.

அதன்படி, நேற்று புதன்கிழமை காலை பெல்மதுளை
கல்பொத்தாவெல, ஸ்ரீ பாத ராஜமஹா விஹாரையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் நினைவுச்சின்ன கலசம் மற்றும் சமன் தேவர் சிலை, உண்டுவப்புர பசலோஸ்வக போயா இன்று சிரிபா மலுவாவில் வைக்கப்படும், அதன் பிறகு இந்த ஆண்டு சிவனொளிபாத மலை யாத்திரை காலம் தொடங்கும்.

புனித பூஜை பொருட்கள் நான்கு வழிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றது. இரத்தினபுரி அவிசாவளை ஹட்டன் நல்லதண்ணி வீதி வழியாகவும் , பெல்மதுளை இரத்தினபுரி ஸ்ரீ பலாபத்த வீதி வழியாகவும் , பெல்மதுளை பலாங்கொடை வீதி வழியாகவும் , பெல்மதுளை குருவிட்ட எரந்த வீதி வழியாகவும் எடுத்துச் செல்லப்பட்டு உள்ளது.

அதன்படி, இரத்தினபுரி மாவட்ட சாசனரக்ஷக சபையின் கௌரவத் தலைவரும், இரத்தினபுரி மாவட்டத்தின் தலைமை சங்கநாயக்கரும், பெல்மதுல்ல ராஜமஹா விஹாரை மற்றும் இரத்தினபுரி போத்தாவில ராஜமஹா விஹாரை இரண்டின் பீடாதிபதியுமான திரு கௌதமஸ்ரீ பாதஸ்தானாதிபதி, பெல்மதுல்ல ராஜமஹா விஹாரை மற்றும் இரத்தினபுரி போத்குல் ராஜமஹா விஹாரை இரண்டின் பீடாதிபதியும், வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதின்ன நாயக்க சுவாமிந்திர தேரர் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன், இரத்தினபுரியில் உள்ள பெல்மதுளை கல்பொத்தவெல ராஜமஹா விஹாரையில் வைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்ன கலசம் மற்றும் சமன் தேவர் சிலை ஆகியவை நேற்று பிற்பகல் சுப நேரத்தில் கோயிலிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, நேற்று காலை வரை பெல்மதுளை கல்பொத்தவெல ஸ்ரீ பாத ராஜமஹா விஹாரையில் பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கௌதம ஸ்ரீ பாதஸ்தான பீடாதிபதி வணக்கத்துக்குரிய பெங்கமுவே தம்மதின்ன நாயக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர், சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான பிரபு. இ.கே.ஏ. சுனிதா, இரத்தினபுரி மாவட்ட செயலாளர்/அரசு முகவர் கே.ஜி.எஸ். நிஷாந்த, சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரத்ன மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நேற்று ஆரம்பமான நான்கு வழிகளில் சுவாமிகள் மற்றும் பூஜை பொருட்கள் நேற்று காலை 8.30 மணிக்கு மலை உச்சியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அதன் பின்னர் அங்கு பௌத்த மத குருக்கள் பிரித் ஓதபட்டு இன்று வியாழக்கிழமை சிவனொளிபாத மலை பருவகாலம் ஆரம்பமானது.இந்த பருவகாலம் அடுத்த வருடம் மே 30 ஆம் திகதி வைகாசி விசாகம் பௌர்ணமி நாளில் நிரைவு பெரும்.