நினைவுகளை மீட்கும் வெள்ளிவிழா

 

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை இ.கி.ச.ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் 1998ம் ஆண்டில் உயர்தரம் கல்வி கற்று 25 ஆண்டினை நினைவு கூறும் முகமாக நினைவுகளை மீட்கும் வெள்ளிவிழா கடந்த சனிக்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் சி.தண்டாயுதபாணியும்,  கெளரவ விருந்தினர்களாக முன்னாள் அதிபர் மா.இராசரெத்தினமும்  தற்போதைய இந்துக்கல்லூரியின் அதிபர் வி. இராஜேந்திரன் 1998 ம் ஆண்டில் உயர்தரத்தில் கற்பித்த ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

1998 ம் ஆண்டு உயர்தர பிரிவு கல்வி கற்ற மாணவர்களுடன் குடும்பத்தினரும் விழாவில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்