நிதி மோசடி தொடர்பாக 120 சீன பிரஜைகள் கைது
இலங்கையில் இணைவழி ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 120 சீன பிரஜைகள் கொண்ட குழுவை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கண்டி, குண்டசாலையில் உள்ள 47 அறைகளைக் கொண்ட சொகுசு பங்களா ஒன்றில் வைத்து இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
சந்தேகநபர்களிடம் இருந்து 15 கணினிகள் மற்றும் 300 கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.