நிதி மோசடியில் ஈடுபட்ட இந்திய பிரஜை கைது

300,000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்த இந்தியப் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொம்பனி வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வசதி செய்து தருவதாக தெரிவித்து இந்திய பிரஜை 300,678 அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிதியினை பெற்றுக்கொண்ட சந்தேக நபர் வீட்டு வசதியை வழங்கவில்லை, எனத் தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 65 வயதுடைய சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.