நிதி பற்றாக்குறையால் மூடப்படும் 4 அரச நிறுவனங்கள்
மக நெகும’ மற்றும் அதனுடன் இணைந்த நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனங்களை பராமரிப்பதற்கு நிதி பற்றாக்குறை நிலவுதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இன்று புதன் கிழமை காலை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
‘மக நெகும’ வீதி கட்டுமான உபகரண நிறுவனம்இ 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது முன்னர் இருந்த வீதி கட்டுமான அபிவிருத்தி நிறுவனத்தின் மறு உருவாக்கமாகும்.
அரச நிறுவன மறுசீரமைப்பின் கீழ் இந்த நிறுவனங்கள் கலைக்கப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்