நிதி நிருவாகம் எதுவுமே தெரியாதவர்களிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது: நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

இது வட்டாரத் தேர்தல் அல்ல, இது நாட்டை ஆளுகின்ற ஆளுமை மிக்கவரைத் தேர்வு செய்கின்ற தேர்தல். அப்படிப்பட்ட ஒரு தேர்தலில் நிதி நிருவாகம் என்று எதுவுமே தெரியாத ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்து சீரழிக்க முடியாது என வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – பூநொச்சிமுனையிலும் வாழைச்சேனையிலும் இடம்பெற்ற கரையோர சமுதாய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து தீர்வு காணும் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வுகளில்நிகழ்வில் பிரதேசத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கடற்றொழில் சமுதாய மக்களிடம் உரையாற்றிய ஆளுநர் நஸீர் அஹமட், நாட்டுக்கு நல்ல தலைவரைத் தெரிவு செய்து நாடும் நமது பிரதேசமும் வளமடைய நாம் முயற்சிக்க வேண்டும்.

தற்போது நாட்டுக்கு அடுத்த தலைவராக வர ஆசைப்படுட்டுடிருப்பவர்களில் சஜித்தோ அனுரவோ இதற்கு முன்னர் பிரதமராகவும் இருந்தததில்லை. குறைந்தபட்சம் ஒரு நிதியமைச்சராகக் கூட இருந்ததில்லை.

முன் அனுபவமில்லாத கோத்தபாயவுக்கு நாட்டைக் கையளித்ததால் நாட்டு மக்கள் பட்ட அவஸ்தையை உலகமே அறிந்தது. அதேவேளை இனவாதம்தான் இந்த நாட்டைச் சிர்குலைத்தது என்ற வரலாற்றுப் பின்னணியில் அவ்வாறான இனவாதமில்லாத தலைவராகவும் பல முறை நிதியமைச்சராகவும் பல முறை பிரதமராகவும் கடைசியாக அதல பாதாளத்திற்குச் சென்ற நாட்டை மீட்டு மக்களைக் காத்த ஜனாதிபதரியாகவும் உள்ள ரணில் விக்கிரமசிங்ஹவே தொட்ர்ந்தும் அடுத்த ஜனாதிபதியாகவும் வரத் தகுதி பெற்றவர் என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் நாம் முகம் கொடுத்துள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்” என்றார்.

ஆளுநர் நஸீர் அஹமட், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயற்திட்ட அபிவிருத்தி அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, இவ்விரு அமைச்சுக்களின் அதிகாரிகள்; ஆகியோர் முன்னிலையில் தமது சமூகமும் பிரதேசமும் பல்வேறு வகையில் நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக கரையோர சமுதாய மக்கள் தெரிவித்தனர். கிராமத்தில் வீதி உட்பட பல உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என்பதையும் அவர்கள் முன்வைத்தனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்